Stax Inc. என்பது இலங்கையின் முன்னணி மேலாண்மை ஆலோசனை நிறுவனமாகும். இதன் தலைமையகம் பாஸ்டனில் காணப்படுவதுடன் சிகாகோ, நியூயார்க் மற்றும் கொழும்பு ஆகிய இடங்களிலும் இதன்  அலுவலகங்கள் உள்ளன. 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், Stax உலகின் மிகப்பெரிய பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், தனியார் சமபங்கு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் போர்ட்ஃபோலியோ நிறுவனங்களுக்கு 40 இற்கும் மேற்பட்ட சர்வதேச சந்தைகளை உள்ளடக்கிய பரந்த அளவிலான தொழில்களில் அறிவுறுத்துகிறது.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம்(USAID), உள்நாட்டு வெளிநாட்டு உதவிகள் மற்றும் அபிவிருத்தி உதவிகளை நிர்வகிப்பதற்கு பொறுப்பான அமெரிக்க கூட்டாட்சி அரசாங்கத்தின் ஒரு சுயாதீன நிறுவனமாகும். 27 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான வரவு செலவுத் திட்டத்துடன், USAID உலகின் மிகப்பெரிய உத்தியோகபூர்வ உதவி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது மற்றும் அனைத்து அமெரிக்க வெளிநாட்டு உதவிகளில் அரைவாசிக்கும் மேலானவற்றைக் கொண்டுள்ளது -இது முழுமையான டாலர்களின் அடிப்படையில் உலகின் மிக உயர்ந்தது.

ஐக்கிய இராச்சியதின் பேங்கர் சஞ்சிகையினால் “2020 வருடத்திற்கான சிறந்த வங்கி” எனவும் குளோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகையினால் “2021ம் ஆண்டிற்கான சிறந்த வங்கி” எனவும் பெயரிடப்பட்ட NDB வங்கியானது இலங்கையிலுள்ள பட்டியலிடப்பட்டுள்ள நான்காவது மிகப்பெரிய வங்கியாகும். மேலும் இது, NDB குழுவின் தலைமை நிறுவனமாகவும் விளங்குகிறது. இலங்கையில் உள்ள ஒரே நிதிச் சேவை நிறுவனமான NDB நிறுவனம் சிறு மற்றும் நடுத்தர வணிகத் துறையின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு உதவுவதற்காகவும் வாடிக்கையாளர்களுக்கு அதன் அனைத்து குழு நிறுவனங்களின் தயாரிப்பு மற்றும் சேவை வழங்கல்களுக்கான தடையற்ற அணுகலை வழங்குவதற்காகவும் தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.