எங்கள் அணுகுமுறை

இலங்கையை உயர் வருமானம் கொண்ட நாடாக மாற்றுவதற்கு தேவையான விரைவான வளர்ச்சி நடுத்தர வர்த்தக நிறுவனங்களால் தூண்டப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக காணப்படுகிறது.

ஒரு வலுவான SME  துறை என்பது உலகெங்கிலும் உள்ள வெற்றிகரமான பொருளாதாரங்களின் தனிச்சிறப்பியல்பு ஆகும். ஆனால் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் பெரும்பாலும் சந்தை வரம்பை வளர்ப்பதற்குத் தேவையான நிதி மற்றும் நிபுணத்துவத்தை பெறுவதற்கு போராடுகின்றன, மேலும் 21 மில்லியன் நுகர்வோர் தளத்தைப் பொறுத்து வளர்ச்சி எப்போதும் மட்டுப்படுத்தப்படும்.

17%

சராசரியாக, இலங்கையின் நடுத்தர அளவிலான வணிகத்தின் வருவாயில் 17% மட்டுமே வெளிநாட்டு விற்பனையிலிருந்து வருகிறது

ஆதாரம்: இலங்கையின் கொள்கை ஆய்வுகள் நிறுவனம்

இலங்கை@100 இயங்குதளம் இலங்கையின் மத்திய சந்தை நிறுவனங்களுக்கு விரைவான வளர்ச்சியினை ஏற்படுத்த கவனம் செலுத்துகிறது, இதில் வருவாய்க்காக உள்நாட்டு சந்தையை குறைவாக சார்ந்து இருக்க உதவுகிறது.

நடுத்தர அளவிலான நிறுவனங்கள் வளர்ச்சி அடைவதற்கு பல தடைகளை எதிர்கொள்கின்றன என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளொம்.

இலங்கை@100 இயங்குதளம் அந்த இடையூறுகளில் இருந்து மீண்டு வர நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்காக உயர்தர, முக்கியமான வணிக ஆலோசனை சேவைகளை வழங்குகிறது

எங்கள் விழுமியங்கள்

உள்ளடக்கம்

பாரம்பரியத்தின் கீழான சேவைக்குழுக்களின் ஆதரவு – பிரதேச அடிப்படை, பாலினம் அல்லது பிற காரணிகள் இந்த தளத்தில் கவனத்தில் எடுக்கப்படும்.

22%–39%

இலங்கையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களில் 22% முதல் 39% வரை பெண்களுக்கு சொந்தமானவை

ஆதாரம்: இலங்கையின் கொள்கை ஆய்வுகள் நிறுவனம்

27 பில்லியன்

தெற்காசியாவில் பெண்களுக்குச் சொந்தமான MSMEக்களின் நிதி தேவை 27 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

ஆதாரம்: உலக வங்கி

தனிச்சிறப்பு

டிஜிட்டல் ஜனநாயகமயமாக்கலுடன், பாரிய பங்கு வகிப்பவருக்கு மாத்திரம் நன்மைகள் கிடைப்பதில்லை. சுறுசுறுப்பான நுழைவுதாரர்கள் சிறப்பை வழங்குகிறார்கள் மற்றும் தொழில்கள் மற்றும் புவியியல் முழுவதும் பெரிய துறைகளை சவாலுக்குட்படுத்துகிறார்கள்.

தொடக்க நிறுவனங்கள் (முடுக்கிகள் போன்றவை) மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு (ஆலோசகர்கள் போன்றவை) அதிக அளவிலான ஆதரவு கிடைக்கிறது, ஆனால் நடுத்தர நிறுவனங்கள் இதன் இடையில் தொலைந்து போகின்றன – அதை மாற்றுவதே எங்கள் நோக்கம்.​